இன்னும் கொஞ்சம் காதலித்து இருக்கலாம் நீ 555

***இன்னும் கொஞ்சம் காதலித்து இருக்கலாம் நீ 555 ***


கண்ணாளனே...


விழித்திருக்கும் என் விழிகளில்
தூங்கி கிடைக்கும் என் கனவே...

இன்னும் கொஞ்சகாலம்
என்னுடன் இருந்து...

என்னை
காதலித்து இருக்கலாம்...

உன் நினைவு
வரும்போதெல்லாம்...

என் இதயத்தில்
கைவைத்து பார்க்கிறேன்...

நீ சுகமாக
இருக்கிறாய் என்னில்...

உன் நினைவின் முத்து சிதறலில்
உனக்கு உருவம் கொடுக்கிறேன்...

உன்னை வெளியில்
இதுவரை தேடியதில்லை...

எனக்குள்
நீ இருப்பதால்...

இருக்க பற்றும் உன் அனைப்பின்
அன்பில் இருக்கும்வரை...

எல்லாம் சுகம்தான்...

உன் நேசங்களை தீபமாக்கி
தீபம் ஏற்றுகிறேன் தினம் தினம்...

உன் நினைவுகளையே மலர்
அஞ்சலியாய் தினம் சமர்ப்பிக்கிறேன்...

ஒரு பெண்ணின் உள்ளாசை
என்பது அதிபுணர்வதில்லை...

இந்த நிஜம் நிஜம்
என்னும் நினைப்பே...

உன் மார்பில் முகம் புதைத்து
விழித்துக்கொண்டு உறங்கும்...

அந்த இனிய தனிமையே...

என் தனிமையின்
துணையாக...

உன் நினைவில்.....

***முதல் பூ. பெ .மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (8-Feb-22, 9:14 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1106

மேலே