என் காதலிக்கு
காதலியே ....!
நீ
என் வசந்தகாலத்தில்
வந்திருக்க வேண்டும்.
உன்னை
மலரோடு மலராய்
அர்ச்சித்திருப்பேன்.
என் மழைக்காலத்தில்
வந்திருக்க வேண்டும்.
என்னோடு உன்னையும்
நனைத்திருப்பேன்.
நீயோ...
என் இலையுதிர் காலத்தில்
அல்லவா வந்திருக்கிறாய்.
நானே தள்ளாடி தினம்
மூச்சுவிடுவதற்கே
பாடாய் பட்டுச்சாகும்போது
உன்னையும் என்னில்
ஏற்பது எங்கனம்?
நீராய் இறைத்து ஊற்றினாலும்
இலைகள் மீண்டும் துளிர்க்காது.
மலர்கள் மீண்டும் மலராது.
நானே பட்ட மரம்
விறகாய் எரிக்கவும் முடியாது ,
செல்லரித்துப் போன மரம்.
நானிறந்துவிட்டால்...
எந்தன் கல்லறையில்
இரண்டே சொட்டு
உன் விழி நீரை
விட்டுச் செல்வாயா
என் கண்ணே...!