தாமரைப்பெண் என்னவள்

என்னவளே என்னென்பேன் உந்தன் அழகை
உன்னை இன்று நான் பார்க்கையிலே நான்
ஓர் தாமரைப்பூத்த தடாகத்தை அல்லவோ பார்த்தேன்
உன்முகம் தாமரை உந்தன் இதழ்கள் தாமரை
கண்கள் தாமரை உந்தன் கைகளிரண்டும்
உந்தன் முன்னழகும் தாமரை மொட்டாய்
உந்தன் பாதாமிரண்டும் தாமரையாய் நீ
காதலியே எந்தன் தாமரைபெண்ணல்லவோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Feb-22, 5:54 pm)
பார்வை : 89

மேலே