நீயாநானா பார்த்துவிடலாம்
யாரை என்ன சொல்ல? - நான்
யாரை வைத்துக் கொள்ள ?
எனக்கு நானே சுமைதான் - இதில்
யாரை நொந்து கொள்ள?
மனதில் என்ன குழப்பம்? - அந்த
முகத்தில் என்ன வாட்டம்?
வந்த பின்னே புரியும் - இந்த
வாழ்க்கை வெறும் வேஷம்.
நொந்த உள்ளம் அழும் - அதைக்
கண்டு உலகம் சிரிக்கும்.
சொந்த பந்தம் அறுத்து - பல
சோக கதைகள் தைத்து
வெந்த புண்ணில் நெருப்பை - இங்கு
வாரி இரைத்து பிரிக்கும்
இந்த மண்ணின் வாழ்க்கை - தினம்
கண்டு கண்டு வெறுக்கும்
எந்தன் மனதில் சோகம் - நாளும்
ஏங்கும் மனதின் வேகம்
இந்த உலகை எரித்திடவா? - இல்லை
வம்பெதற்கென்று ஒதுங்கிடவா?
நான் எழுந்துவிட்டால் - இந்த
உலகம் எந்தன் காலடியில்
நான் எழுதிவிட்டால் - அந்த
வானம் எந்தன் கைகளுக்குள்
பிறகென்ன எந்தன் பார்வையில் ஆயிரம்
மின்னல்கள் மின்ன
எந்தன் வார்த்தையில் உண்மைகள்
எரிமலையாய் வெடிக்க
எழுந்துவிட்டேன்.நீயா?...நானா?
பார்த்துவிடலாம்.