புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார் அகப்பகை ஒன்றஞ்சிக் காப்ப – நீதிநெறி விளக்கம் 55

இன்னிசை வெண்பா

புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார்
அகப்பகை ஒன்றஞ்சிக் காப்ப - அனைத்துலகும்
சொல்லொன்றின் யாப்பர் பரிந்தோம்பிக் காப்பவே
பல்காலுங் காமப் பகை 55

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

உலகம் முழுமையும் (தமது) ஒரு வார்த்தையினாலே வயப்படுத்தக்கூடிய முனிவர் பன் முறையும் காமமாகிய உட்பகையை மிகுதியும் வருந்தியும் காவல் செய்வார்;

அதுபோல், அறிவுடையார் வெளிப்பகை கோடிக்கு மேல் அதிகமாய் இருந்தாலும் (அதற்காக) அஞ்சாமல் உட்பகை ஒன்றேயானாலும் (அதன் துன்பம் பெரிதாகையால்) அதனை அஞ்சிக் காவல் செய்வர்.

கருத்து:

புறப்பகைவரை விட அகப்பகைவர்க்கு அஞ்சுதல் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-22, 6:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

மேலே