இகழ்வது நியாயமா
சூரியப் பார்வை
சூழ்ந்திருக்கும் இடமெல்லாம்
மண் பெற்ற வரம்
மாயவன் தந்தத் தாவரம்—அது
மண்ணை பத்திரமா காக்கும் ,
மனிதர்கள் ,கால்நடைகள் வாழ
மழை ,காற்று, கனிகளை தந்து
உயிர் காக்கும்
இறைவன் தாவரங்களை
இலவசமா தந்ததாலோ, என்னவோ
தாவரங்களின் பலன்கள் அனைத்தும்
தடையின்றி மக்களுக்கும்
இலவசமா கிடைக்கிறதோ !
எரிப்பதற்கு விறகாகிறது
இலையும், கனியும் தந்தாலும்
மருந்தாகியும் உயிர் காக்கிறது
செத்தவர்களை எரிக்க விறகாகி
எரிந்து சாம்பலாகிப் போகும்
செத்தவர்ளோடு சேர்ந்து ,
புதைக்கப்பட்டால்
தூக்கி சுமந்த மண்ணை மறக்காமல்
இறந்தபின் மனிதன் சுமப்பான்
இத்தனை நற்குணங்கள் இருந்தும்
மரம்போல நிற்கிறாயே என்று
இகழ்வது நியாயமா ?