“செல்பி” மோகம்
“செல்பி” மோகம்
பட்டு போன
மரம் ஒன்று
தண்ணீருக்காக
பரிதவித்து
வறண்ட
நிலத்தில்
நின்று கொண்டிருக்கிறது
அருகில் செல்லும்
சில பல
ஜீவராசிகள் சிறு
நீர் கழிக்க
ஒதுங்கினால் கூட
அது உயிர்
பிழைத்து கொள்ளும்
என்னும் எண்ணத்தில்
நின்று
கொண்டிருக்கிறது
வாகனத்தில் வந்த
இளைஞர் இளைஞிகள்
கூட்டம் ஒன்று
இறங்கி மரம்
அருகே வந்து
நின்று
செல்பி எடுத்து
லைக்குக்காகவும்
பாராட்டுக்காகவும்
பலருக்கு அனுப்பி
வைத்து கொண்டிருக்கிறது
ஆனால்..!
மரம் என்ன
எதிர்பார்த்திருக்கும்
என்பதனை
இதை வாசிப்பவர்
வசமே
விட்டு விடுவோம்