காதல் காவியம்

என் எண்ண குவியலை
கோர்வையாக்கிட துடித்த கைகளிடம்
காகிதத்தை கொடுத்து விட்டேன்
கவி எழுதிடவா இல்லை
உன் காதல் காவியத்தை எழுதிடவா
என கேட்டது என் பேனா
எப்படி சொல்வேன் அதனிடம்
கவிஞனாய் இருந்திருந்தால்
கவி எழுதி என் காதலை
உரைத்திருப்பேன் அன்று
இன்றோ கை கூடாத காதலை நினைத்து
காவியம் மட்டுமே
படைக்க போகிறேன் என்று

எழுதியவர் : விஜிவிஜயன் (15-Feb-22, 3:57 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : kaadhal kaaviyam
பார்வை : 139

மேலே