பாப்பா பாட்டு

" பாப்பா பாட்டு"


விரிந்தயிரு கண்ணில்
விரித்தஒளி கண்டேன் !
சிரித்த இதழினோரம்
சிந்தும்-வரிகண்டேன் !
மெல்ல அழுதவேளை
மின்னும் துளிகண்டேன் !
வில்லாய் வளைந்தபோது
வீர மதில்கண்டேன் !
கொஞ்சும் மழலைமொழி
கொஞ்சம் பழகிவந்தேன் !
நஞ்சும் அதிலில்லை
நாளும் பருகவந்தேன் !
கெஞ்சு மடிமை
கிழவயதில் நானின்று
தஞ்சமே உன்னடி தான்.


மரு.ப.ஆதம் சேக் அலி.

எழுதியவர் : மரு.ப. ஆதம் சேக் அலி (16-Feb-22, 7:50 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 70

மேலே