ஊடலில் பேசா மடந்தையாய் அவள்
காதலியே நீ பேசாமல் இருக்கையில்
உன் நயனங்கள் பேச உன் நயனங்களும்
பேச மறுக்க உன் கொவ்வை இதழ்கள்
அலர்ந்து காதல் மொழி பேசுவதை
நீ அறியாயோ இன்னும் ஏனடி என்மீது
கோபம் மௌனமும் ஏனோ சொல்வாயா கிளியே

