ஒரு தமிழ் மகனின் ஆதங்கம்

தாய்க்கீடான தமிழே,
அகிலம் ஆண்ட உன்னை ஆரியப்படை அழிக்க நினைக்குதாம், அறியாதவளா நீ?, நாடுகடந்த உன்னை உன் நாட்டுக்குல்லே நசுக்குதாம், நளிந்தவளா நீ?, இலக்கிய நயம் கொண்ட உனக்கு, இறந்த மொழியும் அது விட்டுச்சென்ற எச்சமும் சமமாகுமா?, இசைக்கு வழி கொடுத்த உன்னை வழிபொக்கன் இசைக்க வழி விட்ட வக்கற்ற மொழி வழிமறிப்பதா?, பிச்சை பாத்திரத்தில் இருப்பது போல், பல கலந்த பந்தி, பாவகை கொண்ட பவித்ரவதி உன்னுடன் பகை கொண்டு, சான்றோர் பல தந்தவளுக்கு சாலை பலகையில்கூட இடம்மறுப்பதா? இனியும் நீ இதை பொறுப்பதா?

சாதிய சாயம் பூசி, சமமில்லை என பிரித்தான், சரியொன்றாய்,
சாஸ்திரம் எனக்கூறி, கவியாடும் என் தாய் உன் சலங்கறுத்து சதிசெய்தான், சகித்துக்கொண்டாய்,
சந்தங்கள் கொண்ட உன்னை முதற்சங்கமமைத்து பாடியவன் படியேற பாக்கியமில்லை என்கிறான், என் தாயே, பண்பு காட்டி படி விட்டு நின்றாய்,

இன்றுன் நிலைகண்டு அந்த வந்தேறியின் நாள்முடிக்க வாளேந்த துனிந்தேன், வள்ளுவனை தந்து என் வாயடைக்க செய்து விட்டாய்,

இந்த உலகம் இன்று தாய்மொழி தினத்தை கொண்டாடுகிறது,
‘இவ்வையத்துள் முதல் மனி தான்வாயின்ற மொழி’யன்றாயின்
‘முதலே தலை, பின்வருவன அதன் கிளை’யென்றால்
திராவிடத்தில் இத்தனை தாய்மொழி, எப்படி இங்கு?

உலகில் பிறந்தொனில் தமிழன் போல் சீர்மிக பிறந்தவன் எவன்?
ஒருநாள் நிச்சயம் வேல்வேன் அன்று முழங்கு
தமிழே தாயே நீயே வாழ்க!

அந்நாளுக்காய் ஏங்கும்,
தமிழ்மகன்.

எழுதியவர் : சுடர்ரொளியன் (21-Feb-22, 4:44 pm)
சேர்த்தது : சுடரொளியன்
பார்வை : 636

மேலே