பறந்து போ

எதுவும் உண்மையல்ல....
ஆனால் எல்லாம் உண்மை.
எதுவும் நாடகமல்ல...
ஆனால் எல்லாம் நாடகம்.
எதுவும் வாழ்க்கையல்ல....
ஆனால் எல்லாம் வாழ்க்கை.
எதுவும் தத்துவமல்ல....
ஆனால் எல்லாம் தத்துவம்.
எதுவும் நடப்பவையல்ல......
ஆனால் எல்லாம் நடக்கும்.
எதுவும் கடப்பவையல்ல....
ஆனால் எல்லாம் கடக்கும்.
எதுவும் உளரல்களல்ல...
ஆனால் எல்லாம் உளரல்கள்.
இது என்ன பிதற்றல் . புரியவில்லை...
ஆனால் எல்லாம் புரியும்.
புரிந்தது போலிருக்கும்...
ஆனால் எதுவும் புரியாது.
இதுதான் மாயையோ!
இல்லையில்லை...
எல்லாம் இயற்கை - ஆம்
எல்லாம் இயற்கைதான்.
எல்லாம் இயல்புதான்.
நாம்தான் புரிந்து கொள்ளாமல்
அலைபாய்கிறோம்...
ஆசை கொள்கிறோம்....
அல்லல் படுகிறோம்.
இயல்பாய் இரு....
இயற்கைக்கு வழிவிடு...
இயற்கையை வணங்கு.
எதுவும் நடக்கும் - அதுவும்
கடந்து போகும்.
புரிந்து கொள். போதை தெளி.
பாதை அறி. பறந்து போ!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (22-Feb-22, 8:11 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : paranthu po
பார்வை : 365

மேலே