நம்மைத் தயார்படுத்துவோம்
வெறுமையோடு வந்தோம்.
வெறுமையோடுதான் போவோம்
கிட்டியதெல்லாம் இங்கிருந்ததுதான்.
அனுபவித்ததும் இங்கிருந்ததைத்தான்.
எதுவும் நமதில்லை.
கொஞ்சநாள் அனுபவித்தோம்.
அன்பு...காதல்....
உறவு...பகை...
வெற்றி....தோல்வி...
எல்லாமே இங்கிருந்து கிடைத்தவைதான்.
நாம் கொண்டுவந்ததில்லை - எதையும்
கொண்டுபோவதுமில்லை.
இங்கிருந்து கிட்டியதை...
இங்கிருந்து அனுபவித்ததை...
இங்கேயே பகிர்ந்து கொடுப்போம்.
அன்பு...அதை பகிர்வோம்.
அறிவு...அதை பகிர்வோம்.
அனுபவம்....அதை பகிர்வோம்.
ஆற்றல்....அதையும் பகிர்வோம்.
பகிர்தலில் கிடைக்கும் இன்பம் - ஓர்
அலாதியான இன்பம்.
பகிர்ந்து...பகிர்ந்து - நம்மை
வெறுமை ஆக்குவோம்.
நம் எண்ணம்...
கனவு...
கொள்கை...
லட்சியம்....
எதையும் வீணாய் மண்ணில்
புதைத்திட வேண்டாம்.
விதையாய் விதைத்து
விருட்சமாய் வளர்த்திட
முயலுவோம்.
வாருங்கள்....
வந்ததைப்போல் வெறுமையாய்ச்செல்ல
நம்மைத் தயார் படுத்துவோம்!