பெருமை
சிறுவயதில் கூடி விளையாடி,
இளம்பருவத்தில் துள்ளிக் குதித்து,
காதலில் தன்னையே மறந்து,
காம இன்பத்தில் மூழ்கி,
உல்லாசமாக பாடிக் களித்து,
வாழ்ந்திடவே அனைவரின்
விருப்பம், ஆசை, அவா, நோக்கம், எண்ணம், ஏக்கம்.
ஆனால்!
ஆசை என்னும் கிளைகளை வெட்டி வெட்டி,
மொட்டையாக்கிய மரத்தை,
துறவிபோல் பார்ப்பதும்,
துறவியாகக் கொண்டாடுவதும்,
நம் பண்பாடு, நம் கலாச்சாரம்.
அதுவே நமது பெருமை,
அதுவே நமது விருப்பம்.