தணல் தமிழ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தணல் தமிழ் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 06-Aug-1982 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 210 |
புள்ளி | : 61 |
நான் ஒரு எழுத்தாளி
"சின்னஞ்சிறு தோல்வி பள்ளியிலே
விளையாட்டில் தோல்வி நண்பனிடத்திலே
இளம்பருவத்தில் தோல்வி காதலியே
பாசத்தில் தோல்வி உடன்பிறப்பிலே
நடுவயதில் தோல்வி அன்னையிடத்திலே
அழகின் தோல்வி நரையிலே
அழகான தோல்வி வாழ்க்கையிலே.."
"தெவிட்டாத தேனாய்
தேனூறிய மலராய்
காயும் நிலவாய்
ஒளிரும் விண்மீனாய்
வான நீல ஒளியாய்
மலரின் குளிர்ச்சியாய்
பனியின் தூய்மையாய்
கேட்போர் மகிழும் இசையாய்
காண்போர் விரும்பும் கொடியாய்
நிகரில்லாத அறிவாய்
கனவில் மறக்காத கனவாய்
நனவில் கண்ட சுகமாய்
கரும்பென இனிப்பவளே
கருவுக்குள் தோன்றியவளே
என்னுள் உயிரானவளே
உயிருக்குள் உணர்வானவளே
எங்கள் அமுதே, வளமே, தமிழே.
"ஒரு தாயிக்கும் பிள்ளைக்குமான உறவு...
கருவிலிருந்து வெளிவந்த குழந்தை தானாகவே உணவை உட்கொள்ளும் வரையே...
ஆனால்,
மனிதன் ஆயுள் வரை அதைப்பிடித்துத் தொங்குகிறான்.
இயற்கை அதுவல்ல..."
நேரிசை வெண்பா
தந்தையை சொன்னவளென் அன்னை கடவுளையும்
எந்தை விளக்கத் தெரிந்தனன் --. தந்தையென்று
கண்டவனை சொல்லும் கயவன் கடவுளை
உண்டிலை கூறுவனோ சொல்
எவனையோ தந்தை யென்று அழைக்கும் கீழ் மகன்கள்
கடவுள் இருப்பதையும் இல்லாததையும் சொல்ல அவருக்கென்ன
தகுதி என்று யாராவது விளக்க முடியுமா? மலையை பார்த்து நாய்
குலைக்கிறது என்று விட்டு விடாதீர்கள். தூக்கத்தை கெடுக்கும் நாயை
எழுந்து வெளியில் வந்து கல்கொண்டு எறியுங்கள். ஓடி பதுங்கும்
பாருங்கள்
P.......
"நல்வழிக்கான பாதையே,
மதத்தின் கோட்பாடே,
அதில் விளைந்த சடங்கே,
கலவரமாக அடித்துக்கொள்ளும்
நிலை வரும் என்றால்,
ஆதியிலேயே தடுத்திருப்பேனே,
கடவுள் என்ற படைப்பையே."
வனவிலங்கு பூங்காவிற்கு சென்றேன்
குரங்குகள் என்னைக் காணப்பிடிக்காமல்
முகத்தைத் திருப்பிக்கொண்டன,
கிளிகள், பருந்துகள் சத்தமிட்டன,
புலிகள் என் நிலைமையைப் பார் என்றது,
யானைகள் தனிமையில் புலம்பின,
மான்கள் ஓட வழியில்லாமல் விழித்தன,
அனைத்தும் ஓலமிட்டதாகவே உணர்தேன்.
சிறை எதற்கு என வினவின?
துணையில்லாமல் கதறின,
செயற்கை உணவால் துவண்டன,
அனைத்தும் துன்புறுவதாக உணர்தேன்.
ஒன்றின் முகத்திலும் புன்னகையில்லை.
யார் இதற்கு காரணம்?
நானா?
ஆம்.
நான் அங்கு சென்றுக்கக்கூடாது,
திரும்பினேன் வலியுடன்,
கையாலாவதத்தனத்தால் துடித்தேன்,
வலி இன்னும் தீர்த்தபாடில்லை.
வனவிலங்கு பூங்காவிற்கு சென்றேன்
குரங்குகள் என்னைக் காணப்பிடிக்காமல்
முகத்தைத் திருப்பிக்கொண்டன,
கிளிகள், பருந்துகள் சத்தமிட்டன,
புலிகள் என் நிலைமையைப் பார் என்றது,
யானைகள் தனிமையில் புலம்பின,
மான்கள் ஓட வழியில்லாமல் விழித்தன,
அனைத்தும் ஓலமிட்டதாகவே உணர்தேன்.
சிறை எதற்கு என வினவின?
துணையில்லாமல் கதறின,
செயற்கை உணவால் துவண்டன,
அனைத்தும் துன்புறுவதாக உணர்தேன்.
ஒன்றின் முகத்திலும் புன்னகையில்லை.
யார் இதற்கு காரணம்?
நானா?
ஆம்.
நான் அங்கு சென்றுக்கக்கூடாது,
திரும்பினேன் வலியுடன்,
கையாலாவதத்தனத்தால் துடித்தேன்,
வலி இன்னும் தீர்த்தபாடில்லை.
இளமையின் மயக்கத்தில் காதலித்தேன்
அவளைச் சேர்ந்துவிட்டதாக கனவுகண்டேன்
கற்பனையிலேயே காலத்தைக் கழித்தேன்
ஒருநாள் நடப்பில் வாழ ஆசைக்கொண்டேன்
அவளை அழைத்து பேசினேன்
அப்போதுதான் தெரிந்தது
அவளுக்கும் எனக்கும் ஓராயிரம் வேறுபாடு
போதுமடா என்று கண்விழித்து
காற்றும் மழையும் கடும்வெயிலும்
உடலில்பட உணர்வுடன் வாழ தொடங்கினேன்.
கருப்பு பணம் வெள்ளையானது
கடனுதவி பணமாக
கைபேசியில் வருகிறது செய்தி
உங்களுக்கு கடன் வேண்டுமா?
எவண்டா பணத்தை வைத்துக்கொண்டு
கடன் கொடுப்பவன்
வாங்கும் கூலி
வயிற்றுக்கும் வாயிக்குமே
சரியாகும் போது
உங்களுக்கு ஏதடா பணம்
கருப்பு வெள்ளையாக
நான் கடன் வாங்கவேண்டுமா?