காதலின் தெளிவு
இளமையின் மயக்கத்தில் காதலித்தேன்
அவளைச் சேர்ந்துவிட்டதாக கனவுகண்டேன்
கற்பனையிலேயே காலத்தைக் கழித்தேன்
ஒருநாள் நடப்பில் வாழ ஆசைக்கொண்டேன்
அவளை அழைத்து பேசினேன்
அப்போதுதான் தெரிந்தது
அவளுக்கும் எனக்கும் ஓராயிரம் வேறுபாடு
போதுமடா என்று கண்விழித்து
காற்றும் மழையும் கடும்வெயிலும்
உடலில்பட உணர்வுடன் வாழ தொடங்கினேன்.