காதல் கவிதை 7

தாமரை இலைநீர் போல
தாரகை நீ ஓடுகின்றாய் - என்
தாகத்தை நீ ரசிக்கின்றாய்.
தாமரையாய் உனையெண்ணி
தளிர்க்கரம் நீட்டுகையில்
அல்லியாய் தான்மலர்ந்து
அங்கங்களைச் சுடுகின்றாய் - பல
அற்புதங்கள் புரிகின்றாய்.
ராத்திரியில் உனைவந்து
ரகசியமாய்த் தொடும்போது
அதிசயமாய் பார்க்கின்றாய்..
அதிகாரங்கள் செய்கின்றாய்.
கண்மூடிப் படுத்தாலும்
கனவினில்தான் வந்து
கவிபுனைய வைக்கின்றாய்...
கதைபலவும் சொல்கின்றாய்.
கண்திறந்து பார்க்கையிலே
மெய்மறந்து நோக்கையிலே
கதைவடைத்து போகின்றாய் ...
கதகதப்பை ஊட்டுகின்றாய்.
உன்னைமட்டும் நான் தொடர முட்டாளா?
ஆமாம்..ஆமாம் அப்படித்தான் ஆக்கிவிட்டாய்.
என்னைமட்டும் நான் மறைக்க முடியவில்லை
எப்படியடி நீ மறைத்து புதுமலராய் ஜொலிக்கிறாய்?
நடுஇரவில் இப்படியோர் கவியெழுத வைத்த உன்னை
நடைபயில வைத்தவனை நாளும் நான் வேண்டுகிறேன்.
இப்படியே விட்டுவிட்டால்
இன்னும் எத்தனை பைத்தியங்களோ..!
இயற்றப்போகும் காவியங்கள் எத்தனையோ..!
அதனால்தான் வேண்டுகிறேன் விரைவிலுன்னை
என்னுடனே இணையவைக்க வேண்டுமென்று.
ஆவியுற நான் தழுவி போதையிலே
கிறுக்கப்போகும் ஆயிரம் கவியிருக்க...
ஏட்டுச்சுரைக்காய்க்கு இங்கு என்ன வேலை?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (13-Feb-22, 1:38 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 116

மேலே