காதல் காவியம் 6

மவுனந்தான் உன் மொழியோ...
மோனம்தான் உன் விழியோ...
மோகத்தால் என்மனது
வேகமாய் போனது - மழை
மேகமாய் ஆனது.
சொல்லடி ஒரு வார்த்தை
சொர்கங்கள் தோன்றட்டும்...
சொந்தங்கள் ஆகட்டும்...
சோகங்கள் ஓடட்டும்.
கல்லடி உன் மனது
கரைத்தாலும் கரையாது.
கள்ளடி நான் தினமும்
தான் அருந்திஅருந்தி
என் கவலைகள் மறந்திட - ஏன்
உன்னையே கலக்கி அந்தக்
கோப்பையில் குடிக்கிறேன் நாளும்...நாளும்.
கவிதைகள் பிறந்திடும்...
காவியங்கள் ஆகிடும்.
கவிஞனின் காலைவிதிக்
கொடுமையே அதுதான்...அதுதான்.
உன்னைப்போல் கல்லைக்கண்டு
காவியங்கள் படைக்க எண்ணி
கள்ளைக் கண்டு கலையங்கள்
சுமந்தவர்கள் ஆயிரம்...ஆயிரம்.
பாவி நானும் பாழும்
அந்தச் சதியாட்டத்தில்
பரிதவிக்க வீழ்ந்துவிட்டேன். பாவம்...பாவம்.
ஊடல்கண்டு...உதிரம் சிந்தி...
உள்ளம் நோக...அழுத கண்ணீர்
ஆறாயிங்கு ஓடும்போது
தண்ணீர்ப் பஞ்சம் இப்போதற்கில்லை.
தன்னினைவும் என்போன்றோர்க்கில்லை

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (13-Feb-22, 12:57 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 84

மேலே