மௌனம் களைப்பயா

கார்மேக திரை போர்த்திய
கண் மனியே
திரை வழி குரல் கேட்டு
மயங்கினேன் நீ
குயில் இனமா என்று ..!

அல்லி இலை மேலே
அன்னம் பார்த்து
கரையும் காக்கை எனக்கு
உன்மேலே காதல் வந்ததென
எப்படி சொல்வே னம்மா ..!

காதல் மறைத்து கண்கள்
கலங்கி நிற்கும்
என் கண்ணம்மா கண்ணீர்
துடைத்து உன்னுள்ளம் சேர்வேன் அடுத்த ஜென்மம் ஒன்றில் ..!

அதுவரை ...

அந்தி மாலையிலே நீ
முந்தி பறக்கும்போது
இலந்தை மரமோரம் ஒளிந்து
பார்த்து உள்ளம் குளிர்ந்து
போனால் அது போதுமம்மா ..!

எழுதியவர் : அரவிந்த் நிலன் (13-Feb-22, 12:18 pm)
சேர்த்தது : Aravinth Nilan
பார்வை : 126

மேலே