வனவிலங்கு பூங்கா
வனவிலங்கு பூங்காவிற்கு சென்றேன்
குரங்குகள் என்னைக் காணப்பிடிக்காமல்
முகத்தைத் திருப்பிக்கொண்டன,
கிளிகள், பருந்துகள் சத்தமிட்டன,
புலிகள் என் நிலைமையைப் பார் என்றது,
யானைகள் தனிமையில் புலம்பின,
மான்கள் ஓட வழியில்லாமல் விழித்தன,
அனைத்தும் ஓலமிட்டதாகவே உணர்தேன்.
சிறை எதற்கு என வினவின?
துணையில்லாமல் கதறின,
செயற்கை உணவால் துவண்டன,
அனைத்தும் துன்புறுவதாக உணர்தேன்.
ஒன்றின் முகத்திலும் புன்னகையில்லை.
யார் இதற்கு காரணம்?
நானா?
ஆம்.
நான் அங்கு சென்றுக்கக்கூடாது,
திரும்பினேன் வலியுடன்,
கையாலாவதத்தனத்தால் துடித்தேன்,
வலி இன்னும் தீர்த்தபாடில்லை.