பசியெனும் கொடிய மிருகம் 555
***பசியெனும் கொடிய மிருகம் 555 ***
கொடிய நோய் பசி...
உலகில் கொடிய மிருகமொன்று
உண்டு அதன் பெயர் பசி...
சோமாலியாவில் வாட்டி
வதைக்கிறது வயிற்று பசி...
மாணவ மாணவியரை
துரத்துகிறது அறிவு பசி...
அரசியல்வாதி
துரத்துவது பதவி பசி...
பதவியில் இருப்பவர்கள்
துரத்துவது பண பசி...
இளைஞர்களை வென்று துரத்துவது
சிற்றின்ப மது போதை பசி...
பட்டதாரிகள் துரத்துவது
வேலையெனும் பசி...
விவசாயிகள் வேண்டுவது இறக்கும்
நிமிடம்வரை உழைப்பு எனும் பசி...
விலைமாதர்கள் தீர்ப்பது
ஆடவர்களின் காமபசி...
எழுத்தாளர்கள் துரத்துவது
கற்பனை என்னும் பசி...
மழைமேகம் தீர்ப்பது பூமியில்
வரட்சியெனும் பசி...
கதிரவன் தீர்ப்பது பூமியில்
வெளிச்சமின்மை எனும் பசி...
மங்கையர்கள் வேண்டுவது அகப்பை
நிரம்பவேண்டுமெனும் பசி...
உலக உயிர்கள் எல்லாம்
தேடுவது காதலெனும் பசி...
ஓவியனுக்கு தகுந்த
வண்ணம் தேர்ந்தெடுப்பதில் பசி...
சிற்பிக்கு விளைந்த
பாறையை தேர்ந்தெடுப்பதில் பசி...
பசியெல்லாம் நிற்கும் நாள்...
முதுமையில் மரணம் தழுவும்
அந்த இனிய நாள்.....
***முதல்பூ பெ .மணி.....***