தமிழே
"தெவிட்டாத தேனாய்
தேனூறிய மலராய்
காயும் நிலவாய்
ஒளிரும் விண்மீனாய்
வான நீல ஒளியாய்
மலரின் குளிர்ச்சியாய்
பனியின் தூய்மையாய்
கேட்போர் மகிழும் இசையாய்
காண்போர் விரும்பும் கொடியாய்
நிகரில்லாத அறிவாய்
கனவில் மறக்காத கனவாய்
நனவில் கண்ட சுகமாய்
கரும்பென இனிப்பவளே
கருவுக்குள் தோன்றியவளே
என்னுள் உயிரானவளே
உயிருக்குள் உணர்வானவளே
எங்கள் அமுதே, வளமே, தமிழே.