போதி மரமும் புத்தர் சிலையும்
போதி மரமும் இருக்கு
புத்தனுக்கு சிலையும் இருக்கு
ஆனால் அவரின் போதனைக்கு
மட்டும் இடமில்லை
பசியில் அழுவும்
குழந்தைக்கு பாலில்லை
பட போஸ்டருக்கு
பால் அபிஷேகம்
மது உடலுக்கு கேடு
நாட்டுக்கு கேடு
ஊற்றி கொடுப்பது
தாய் நாடு
அன்று
கற்புக்கரசி கணவனின்
உயிருக்காக மதுரையை
எரித்தால்
இன்று
கல்லக்காதல் உறவுக்காக
கணவனை உயிரோடு எரிக்கும்
கற்புக்கரசிகளோ-பல
சுகந்திரமும் கிடைத்தது
ஆடம்பர வாழ்க்கையும்
கிடைத்தது சிலர்க்கு
பலர்க்கு
உன்னவே உணவில்லை
இதுவா சுகந்திரம்?
💐💐துரைராஜ் ஜீவிதா💐💐

