மகிழ்ச்சியின் தேடலில் மர்மம் அத்தியாயம் 5
அத்தியாயம் 5
SP : நீ வேற இதைவிட பெருசா எனக்கு பல்பு குடுத்து இருக்க உங்க அக்கா.
நிஷா: அது தெரிஞ்ச விஷயம் தானே அங்கிள். சரி ரொம்ப போரா போயிட்டு இருக்கு சோ இதேயே ஒரு டாப்பிக்கா பேசலாம். அவங்களும் வீட்ல இல்ல. எல்லாரும் அவங்க ரெண்டு பேர் நாலா பல்பு வாங்குன மொமெண்ட். அங்கிள் எனக்கு தெரிஞ்சு நீங்க தான் அதிகமா வாங்கி இருப்பிங்க நீங்க தான் first ஆரம்பிக்கணும்.
பஷீர்: ஆமா ரொம்ப நேரமா ரொம்ப சீரியஸ் பேசிட்டு இருக்கோம் செம்ம யோசனை தான்.
SP : அப்படி சொல்லுறிய சரி நானே ஆரம்பிக்கிறேன். அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு 5 வயசு இருக்கும். உங்க அக்காவும் உன் மச்சானும் சென்னை போலீஸ் குவாட்டர்ஸ் என் வீட்ல விளையாடிட்டு இருந்தாங்க. அவங்க எப்பவும் போல தான் விளையாடிட்டு இருந்தாங்க. திடிர்னு உங்க அக்கா அழுதா உங்க மச்சான் அடுச்சு வச்சு இருப்பான் போல நான் உள்ள போறதுக்கு உள்ள வேகமா கண்ணா தொடச்சிட்டு சிரிச்சுக்கிட்டு இருக்க என்னமா ஏன் அழுத்த அப்படினு கேட்டேன் ஒன்னும் இல்ல அங்கிள் சொல்லிட்டு வீட்டுக்கு போலாம்னு அவனை கூப்டுட்டு இருக்க நான். உங்க மச்சான் எனக்கு ரொம்ப பயப்படுவான் உடனே அவனை கேட்டேன் ஏன்டா அழுதா அவ? நான் அவளை அடுச்சுட்டேன் சாரி அங்கிள் அப்படினு சொன்னான். நான் அவனை நல்ல திட்டு திட்டுன்னனு திட்டினேன் உடனே பாத்தா உங்க அக்கா பயங்கரமா அழுகுறா நான் என்னமா அதான் அங்கிள் அவனை திட்டினேன்ல அப்படினு சொன்ன அங்கிள் நீங்க ஏன் அவனை திட்டுறீங்க அதான் அழுதேன். சொல்லுற. உடனே கிட்சேன்ல இருந்த உங்க ஆண்ட்டி சகுந்தலா என்னங்க என்ன ஆச்சு வேகமா வந்து உடனே உங்க அக்கா ஆண்ட்டி அங்கிள் என்னையும் இவனையும் பயங்கரமா திட்டுறாங்க அதான் தான். உடனே உங்க ஆண்ட்டி என்னனு கத்துறா. என்னங்க நீங்க சின்னபுள்ளைகள இப்படியா திட்டுவீங்க. ஏய் நான் ஒண்ணுமே செய்யலை அப்படினு சொல்லிட்டு இருக்கேன் உங்க அக்கா திரும்பவும் சரி வாடா நம்ம வீட்டுக்கு போலாம்னு ரொம்ப சாதாரணமா கிளம்பிட்டா. அப்போவே புரிஞ்சுக்கிட்டேன் இவங்க ரெண்டு பேருக்கு இடைல இருக்குற பாண்டிங். அப்போல இருந்ததே நான் தெரிஞ்சுக்கிட்டே தான் எல்லாம் செய்வேன் அவங்க ரெண்டு பெரும் ஒருத்தர் ஒருத்தர் மேல பொசசிவா இருக்குறது பாக்க நல்ல இருக்கும். சரி அடுத்து யாரு? சகு நீ சொல்றியா?
சகுந்தலா: ஏங்க நீங்க சொன்ன விசயத்துல தான் நான் இருக்கேன் அப்பறம் என்ன அதனால நம்ம ரஹீமா அண்ணி சொல்லட்டும். அண்ணி நீங்க சொல்லுங்க.
SP : அதுவும் சரி தான்.
ரஹீமா: நான் என்ன சொல்ல ஏகப்பட்டது இருக்கே. இவங்க கல்யாண கதையை சொல்றேன். அன்னிக்கு ஆமினா காலைல வந்தாப்ல ஏன்மா நசீமா படுச்சு முடுச்சு ட்ரைனிங் போக ஆரம்புச்சுட்டா இவனும் ட்ரைனிங் முடுஞ்சு இங்கவே போஸ்டிங்க ஆயிட்டான் ரெண்டு பேருக்கும் கல்யாணத்த பண்ணி வச்சுருவோம் என்ன சொல்ற? அப்படினு கேட்டேன் அதுக்கு உங்க அம்மாவும் ஆமா மச்சி இவங்களும் அதன் சொல்லிட்டு இருந்தாங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட. இக்பால் அண்ணனும் அத தான ஆசைப்பட்டாரு. நான் வீட்ல இவங்களடையும் அவகிட்டயையும் பேசிட்டு நாம்ம ஒரு நல்ல தேதி பாத்து முதல்ல பரிசம் போற்றுவோம் அப்படினு சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டாங்க. உங்க அம்மா கொஞ்சம் நக்கல் புடுச்சவ தான அங்க போய் உங்க அம்மா சும்மா இல்லாம அவளை சும்மா நக்கல் பண்ணி இருப்பாங்க போல. ஏன்மா நீ சொல்லு?
ஆமினா: ஹாஹ் ஹ் ஹா ஆஹ்.. அட ஏன் மச்சி நீங்க வேற. நான் என்ன சொன்னேனா இந்த மாதிரி ரஹீமா மச்சி அவனுக்கு பொண்ணு பாக்குறாங்க போல இன்னைக்கு சொல்லிட்டு இருந்தாங்க அப்படினு சொல்லிட்டு நான் இவங்க பாத்து பாத்து கண்ணா காட்டுனேன். இவங்க உடனே ஏன் அவ வந்த உடனே ஆரம்பிக்கிற சொன்னாரு சைகைள. அவ பதிலே சொல்லல நான் உடனே நம்ம சொந்தத்துல வேண்டாம்னு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க அப்படினு சொல்லிட்டு பாத்தா வேகமா உள்ள இருந்து வாரா. ஏன் மாமிக்கு எங்களைலா பாத்தா பொண்ண தெரிலையம்மா. மாமா தான் முன்னாடியே சொன்னார்களா எனக்கும் அவனுக்கும் தான் கல்யாணம் அப்படினு அப்பறம் என்ன? அட போடி நீ வேற அண்ணனே போய்ட்டாங்க இன்னுமா அவர் சின்ன வயசுல சொன்னதை நீ நினைச்சுட்டு இருக்க. எப்படி விட முடியும்? நீங்க ஏதும் சொல்லலையா அம்மா? நான் என்ன சொல்ல அவங்க முடிவு. ஓஹ் நீ ஒரு வார்த்தை கூட பேசாம வந்தியா. சரி அவன் இருந்தானா? மாப்பிளை இல்ல ஆனா அவன்கிட்ட கேக்காம சொல்லுவாங்களா அபப்டினு சொல்லிட்டு நான் சிருச்சுகிட்டு இருந்தேன் உள்ளுக்குள்ள.
நிஷா: அப்பறம் என்ன ஆச்சு அம்மா. அப்படினு ஆர்வமாய் கேக்கும் போதே
போன் அடிக்கிறது...ட்ரிங் ட்ரிங்
நிஷா: மாமி இருங்க நான் எடுக்குறேன். ஹலோ.
நஸீமா: ஏய் நான் தான் நாங்க எல்லாம் வாங்கி முடிக்க போறோம் பாப்பா எந்துருச்சில?
நிஷா: ஓ அபப்டியே சரி. இல்லை எதிரிக்கல.
நஸீமா: சரி மாமி எங்க வேற?
நிஷா: ஏய் அவங்க பேசிட்டு இருக்காங்க அதான் நான் போன் எடுத்தேன். என்ன ஏதும் சொல்லனுமா?
நஸீமா: ம் ஒன்னும் இல்ல வேற ஏதும் ஜாமான் வீட்டுக்கு வாங்கணுமானு கேளு?
நிஷா: மாமி மாமி
ரஹீமா: என்னமா?
நிஷா: நஸீமா தான் வேற ஏதும் ஜாமான் வாங்கணுமானு கேக்குறா?
ரஹீமா: பால் மட்டும் தான் வேற ஏதும் இல்ல. வாங்கிடாலனு கேளு.
நிஷா: ஏய் பால் மட்டும் தான்.
நஸீமா: ம்ம் சரி நாங்க வர ஒரு அரைமணி நேரத்துல வந்துருவோம். சரி நான் வைக்கிரேன்.
நிஷா: சரி ஓகே.
ரஹீமா: என்னமா அக்கா சொல்ற?
நிஷா: மாமி பாப்பா எந்துருச்சுடலானு கேட்ட அப்பறம் வேற ஏதும் வாங்கணுமானு கேட்ட இன்னும் அரை மணி நேரத்துல வரங்களாம். அம்மா நீ சீக்கிரம் சொல்லு வந்துற போரா.
ஆமினா: அப்பறம் என்ன நான் மாமிட்ட பேசிக்கிறேன்னு கிளம்பிட்டா. இதுக்கு அப்பறம் மாமி தான் சொல்லணும்.
நிஷா: சொல்லுங்க மாமி.
ரஹீமா: இன்னும் நல்ல நியாபகம் இருக்குமா. புயல் மாதிரி வந்த. கீழ வரப்பேயே மாமி மாமின்னு ஒரேய கத்தம். நான் என்னமோ ஏதோனு வேகமா வந்த பொறிஞ்சு தள்ளிட்டா. ஏன் மாமி என்ன எல்லாம் பார்த்த உங்களுக்கு பொண்ண தெரிலயா என்னமோ உங்க பையனுக்கு வெளிய பொண்ணு பாக்கணும்னு அம்மாட்ட சொன்னிங்கலாமா. நாங்க ரெண்டு பெரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா இருந்து இதே ஆசையில வளந்து ஆளாயி படிப்பை முடிச்சு எல்லா நல்ல நடக்கும்னு நம்பிக்கையாய் இருந்த இப்படி சொல்லியிருக்கீங்க ஏன் உங்களுக்கு மாமா சொன்னது நியாபகம் இல்லையா. ஏன் இப்படி பண்றீங்க எங்க உங்க மகனா கூப்புடுங்க அவன் என்ன சொல்றான் நீங்க சொன்ன அவனும் தலையை ஆட்டிட்டு சும்மா நிப்பான். நானும் பாக்குறேன் என்னை தவிர எவ வரான்னு. கூப்புடுங்க மாமி. நான் சொன்னேன் நசீமாட்ட ஏன்மா இவ்வளவு பேசுனா நீயே அவனை கூப்புடு. மாமி அதை கூட நீங்க பண்ண மாட்டிங்களா. ஏய் எங்கட இருக்க சீக்கிரம் வா! என் மகன் பாவமா வந்து நின்னான். உடனே இவ எங்கட போன இங்க ஒருத்தி காட்டு கத்து கத்துறாளே உனக்கு காதுல கேக்கலையா உடனே அவன் ஏய் எப்போ வந்த நான் பத்துரூம்ல இருந்தேன். என்ன ஆச்சு கேட்டான்மா அவ்வோளோ தான் உடனே இவ ஏன் உனக்கு ஒன்னு தெரியாத. இல்லை நடிக்கிறிய இங்க பாரு என்னை விட்டுட்டு வேற யாரு கூடையாவது கல்யாணம் அப்படினு போன மவனே செத்த நீ அப்படினு சொல்லிட்டு கிளம்பிட்டமா. உடனே உங்க மச்சான் என்னமா ஆச்சு இவளுக்கு? அட ஒன்னும் இல்லைடா மாமி வந்த அப்படினு நடந்தது எல்லாம் சொன்னேன். சரிம்மா அதுக்கு ஏன் இவ நேர்மாறா காத்திட்டு போற. எல்லாம் உங்க மாமிக்காரி பண்ண வேலையா இருக்கும் போகும் போதே சொன்ன அவளை கொஞ்சம் நக்கல் பண்ணனும்னு அத பண்ணிட்ட போல அதன் இவ்வளோ கோவம் அவளுக்கு சரி நீ வா இந்த சாப்பாட்டை மாமிட்ட குடுத்துட்டு வா. இருங்கமா நீங்க முதல்ல மாமிட்ட கேளுங்க என்ன நடந்தது அப்படினு சரினு நானும் உங்க அம்மாக்கு போன் போட்ட அவ நடந்த கதையெல்லாம் சொன்ன. ஓ இதான் விஷயமா நானும் அவளை கொஞ்சம் நக்கல் பன்றேன் உங்க மச்சான் கிளம்பிட்டான் நிஷா அதுக்கு அப்பறம் நடந்தது உனக்கு தெரியும்ல.
நிஷா: ஆமா மாமி செம்ம காமெடி.
SP : அது எப்படிமா எங்களுக்கு தெரியாதுல சொல்லுமா.
நிஷா: அது வந்து அங்கிள்..
தொடரும்......