இம்மூவர் போற்றற்கு அரியார் புரிந்து – திரிகடுகம் 76
நேரிசை வெண்பா
மாரிநாள் வந்த விருந்தும், மனம்பிறிதாய்க்
காரியத்திற் குன்றாக் கணிகையும், - வீரியத்து
மாற்றம் மறுத்துரைக்குஞ் சேவகனும் இம்மூவர்
போற்றற்(கு) அரியார் புரிந்து 76
– திரிகடுகம்
பொருளுரை:
மழைக்காலத்தில் வந்த விருந்தினரும், தன் மனம் வேறொன்றிற் சென்றும் பொருள் வருவாயினை மேற்கொள்ளுதலில் குறைவுபடாத வேசையும், போரில் காட்டப் புகுந்த வெற்றித் திறமையில் தலைவன் பகைவர்மேல் அருளாற் கூறிய சொல்லை மறுத்துச் சொல்லிச் செல்கின்ற வீரனும் ஆகிய இம் மூவரும் போற்றுதலுக்கு உரிய அரியவர்கள் ஆவர். (They are the rarest people)
கருத்துரை:
மழைக்காலத்தில் வந்த விருந்தினரும், காம மயக்கமில்லாத வேசையும், வெற்றியையே சிறப்பாகக் கருதும் வீரனும் பாதுகாத்தற்கு அரியவராவர்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
