பெண்

பத்துமாதம் சுமந்து பிழைக்கனியமுது
பெற்று தருகின்றாள் பெண்
சுமக்கும் போது வலிகள் அத்தனையும் தாங்கி
குடும்பத் தலைவி அவள் கணவன் தரும்
தொல்லைகள் வலிகள் அத்தனையும் தாங்குபவள்
இன்னும் மாமியார் தரும் இன்னல்கள்
பின்னர் வளர்க்கும் போது குழந்தைகள் தரும்
தொல்லைகள்......இது போதாதென்று
உழைக்கும் அலுவலகத்தில் சொல்லமுடியா
சில சில தொல்லைகள்.......இப்படி
அத்தனையும் சுமைதாங்கிபோல் தாங்கி
வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுபவள்
பெண்...... நம்மை எல்லாம் சுமக்கும் பூமிதாயைப்போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Mar-22, 7:58 pm)
Tanglish : pen
பார்வை : 68

மேலே