இன்றைய இளைஞர் சமுதாயம்

இன்றைய இளைய சமுதாயம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் இளைஞர் சமுதாயம்!
அசாத்திய அறிவும் நல்ல நகைச்சுவை உணர்வும் சேர்ந்து அமைந்த சமுதாயம்!
எவ்வளவோ புதுப்புது கண்டுபிடிப்புகளை தந்து மனித சமுதாயத்திற்கு மிகவும் உபயோகமாக இருந்து வரும் புதிய சமுதாயம்!
எந்த துறையிலும் கம்ப்யூட்டரின் அபரிமிதமான நுணுக்கங்களை சாமர்த்தியமாக பயன்படுத்தி அத்துறைக்கு பெரும் உதவிக் கரமாக இயங்குகிறது இந்த நவீன வேக சமுதாயம்!
கலைகள் என்று வரும்போது பல பழைய கலைகள் கொலை செய்யப்பட்ட போதிலும் சில புதிய கலைகள் நல்ல ஏற்றம் உள்ளதாக இருக்கிறது!
அன்று வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் மட்டுமே ஒரிஜினல் பாடகர்கள் பாடியதைத் தான் கேட்க முடிந்தது!
இன்று கரோக்கி என்ற அருமையான நுணுக்கம் மூலமாக யார் வேண்டுமானாலும் எந்த பாடலை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எவருடனும் எந்த தேசத்திலிருந்தும் பாடலாம்!
அதே நேரத்தில் இக்காலத்தில் அருவருப்பான நகைச்சுவைகள் மிகவும் வெறுப்பைத் தருகிறது!
சிரிப்பு என்னும் பெயரில் வாய்க்கு வந்தபடி அநாகரீகமான கொச்சையான வார்த்தைகளை சர்வசாதாரணமாக உபயோகப் படுத்துவது, கழிவு அறையில் பயன்படுத்தும் கழிவு தொட்டிகளை வைத்து நகைச்சுவை காட்சிகள் அமைப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகளை அடிக்கடி படமெடுப்பது இவை எல்லாம் இளைய தலைமுறையினரின் மதிப்பை வெகுவாக குறைப்பதாக உள்ளது!
தவிர, எல்லா வயது பெண்களையும் கவர்ச்சி நடனம் செய்ய வைத்து, பிறர் பாலுணர்வை தூண்டி விடுவது, பெண்களின் சிதைந்து போய் கொண்டிருக்கும் கற்பு தன்மையை ஆபாசமாக சித்தரிக்கிறது!
மேலும் நாவின் சுவைக்காக அப்பாவி விலங்குகளை வதைத்து கொன்று உணவாக மாற்றுவதும் மனிதாபிமானமற்ற தன்மையும் மனதுக்கு மிகவும் வருத்தத்தை தருவதாக உள்ளது!
இவற்றை பிரித்து தனியே வைத்து விட்டு பார்த்தால், இளைஞரின் இன்றைய சமுதாயம் மிகவும் பாராட்டப் படவேண்டிய நூதன சமுதாயமே!

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (8-Mar-22, 10:40 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 438

சிறந்த கட்டுரைகள்

மேலே