பப்பு பாடல்-4
ஆராரிராரிரோ அழகே ஆராரிரோ
ஆராரிராரிரோ அமுதே ஆராரிரோ
ஆராரிராரிரோ ஆராரிரோ ஆரிராராரிரோ
தேரொன்னு ஓடுது
தென்றல தேடுது
பூவொன்னு வாடுது
பூங்காத்த தேடுது
தாலாட்டு பாடத்தான்
தாயொன்ன தேடுது
தாழம்பூ வாடுது
ஆராரிராரிரோ அழகே ஆராரிரோ
ஆராரிராரிரோ அமுதே ஆராரிரோ
ஆராரிராரிரோ ஆராரிரோ ஆரிராராரிரோ
நாள்தோறும் நா வாரேன்
நாலஞ்சு வரம் தாரேன்
நாரோடு பூ தாரேன்
நறுமண தேன் தாரேன்
நிலவோடு விளையாடி
நீ தூங்கு அன்னமே
நிலாவோட சின்னமே
ஆராரிராரிரோ அழகே ஆராரிரோ
ஆராரிராரிரோ அமுதே ஆராரிரோ
ஆராரிராரிரோ ஆராரிரோ ஆரிராராரிரோ