மனிதனே...!!!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

மனிதனே!
நீ
பொன் பொருளை தேடினாய்...
ஆனால்
கருணையை
தொலைத்து விட்டாய்...

அறிவைத் தேடினாய்
ஆனால்
ஆக்கத்தைத்
தொலைத்து விட்டாய்....

புதுமையைத் தேடினாய்
ஆனால்
பழமையைத்
தொலைத்துவிட்டாய்...

பணத்தைத் தேடினால்
ஆனால்
நேர்மையைத்
தொலைத்து விட்டாய்....

சுதந்திரத்தை தேடினால்
ஆனால்
கட்டுப்பாட்டைத்
தொலைத்துவிட்டாய்....

வேலையைத் தேடினாய்
ஆனால்
கடமையைத்
தொலைத்து விட்டாய்.....

பதவியை தேடினாய்
ஆனால்
கண்ணியத்தை
தொலைத்து விட்டாய்.....

ஆலயங்களை தேடினாய்
ஆனால்
அன்பைத்
தொலைத்து விட்டாய்.....

தொலைத்ததையும்
சேர்த்து
நீ
என்று தேடுகிறாயோ
அன்றே!
உன் தேடல்
முழுமையடையும்....!!!

*கவிதை ரசிகன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எழுதியவர் : கவிதை ரசிகன் (12-Mar-22, 10:25 pm)
பார்வை : 43

மேலே