அன்பே அமைதி தரும் ஆனந்தம்
அன்பு, துள்ளி ஓடும் பரந்த விரிந்த புனிதமான நதி!
அமைதி, நதியின் ஆழத்தில் குடிகொள்ளும் சலனமில்லாத கதி!
ஆனந்தம் , இன்ப நதியில் ஊர்ந்து செல்லும் அழகான படகு போல!
அன்பு, அமைதி, ஆனந்தம்
ஒருங்கிணைந்த மனிதன், பொறுமையின் எல்லை, பூமி போல!
அளப்பரிய அன்பே தன்னலமற்ற நிகரில்லாத புனித கங்கை நதி!
ஒப்பற்ற அமைதியே, கடலின் கீழ் கண்டெடுத்த ஒளிரும் முத்து சிற்பி !
பேரானந்தமோ , விரிசலற்ற மூழ்காத பிரம்மாண்டமான டைட்டானிக் கப்பல்!

