வாக்குடைமை

குறள்
அதிகாரம் : வாக்குடைமை
1. முடிகொண்டோர் கோதிறன் வாளது கூர்மை; குடிகொண்டோர் வாக்காமையும் அரசு.
2. சொத்துடைமனிதர் இயம்புவதே சட்டமெனும் நிலைத்திரிந்து; வாக்குடைமனிதரின் சொத்தாம் வாக்கு.
3. அரசியல்சாசன வெகுமதியாம் வாக்குரிமை பேணுதல்; என்றும் வாக்குடைமனிதரின் கடமையே.
4. பதினெட்டில் கடுக்காயெனினும் மிடுக்காய் மிளிர்வாய்; நற்பொருட்டாய் உயர்த்திடும் வாக்கு.
5. விரல்மையிட்டு வாக்குதனை செலுத்திடவே உரிமை; குரலோங்கி ஒலித்திடுமாம் பேரவைதனிலே.
6. குடிநலன்காத்து சட்டதிட்டமியற்றா ஆட்சிதனை களைய; மௌனப்புரட்சிதனை வித்திடும் வாக்கு.
7. ஆடிக்காற்றுக்கும் அசைந்திடாமல் தீங்கிழைக்கும் ஆட்சிதனை; ஊதிபுரட்டிடும் மந்திரமாம் வாக்கு.
8. சாதிமத இனமொழி பேதமுரைக்காமல் செலுத்திட; சிறப்பதுவே வாக்கின் மேன்மை.
9. முறம்கொண்டு புடைத்திடவே கல்குருணைஉமி நீக்கிவாக்கிட; உரம்கொண்டு அமையுமாம் நல்லாட்சி.
10. விலைகொண்டு வீழ்த்திடவே அணியணியாய் வந்திடினும்; பிடிகொடா திறம்புவதாம் நல்வாக்கு.

எழுதியவர் : ஆ.பிரிதிவி (13-Mar-22, 10:39 pm)
சேர்த்தது : PRITHVI
பார்வை : 358

மேலே