வாழ்வே மாயம்

மாயா ஜாலங்கள்
நிறைந்த மனிதனின்
வாழ்க்கை
இறுதி சுற்றில்
சொல்லாமல்
கொள்ளாமல்
உலகத்தில் இருந்து
விடை பெறுகிறது...!!

இதுதான் வாழ்க்கை
என்று புரிவதற்குள்
ஆடாத ஆட்டம் ஆடிய
மனிதனின் ஆட்டம்
மண்ணுக்குள்
அடங்கி விடுகிறது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Mar-22, 6:40 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vaazhve maayam
பார்வை : 186

மேலே