வண்ணங்களின் அதிபன்
கதிரவன் மறைந்ததனால்
துயறுற்று கருஞ்சேலை உடுத்தினாள்
காதலி வானவள்!
அவளோடு சேர்ந்து
தன் அங்கமெல்லாம்
கரி பூசிக்கொண்டாள்
அன்னை பூமியவள்!
மீண்டும் ஓடினான் ஓடினான்
கிழக்கு நோக்கி ஓடினான்
காதல் தேடி ஓடினான்
என்றுமே இறவாதவன்
அவன் கதிரவன்!
தங்க ஒளியோடு
தங்கத்தின் தங்கமாக
கதிரவன் உதயமானான்.
வானவளின் பொட்டானான்!
கிழக்கின் வேந்தன்.
வண்ணங்களின் அதிபன்!
கதிரவன் வந்தான்.
வானைப் பார்த்தான்
வானம் நீலமானது.
பூமியைப் பார்த்தான்
பூமி பச்சை பசுமையானது.
அவன் மகிழ்ச்சி
மஞ்சள் மலரானது!
அவன் கோபம்
சிவப்பு தீயானது!
அவன் புன்னகை
பல வண்ண பூக்களானது!
அவன் காதலோவியம்
ஏழு வண்ண வானவில்லானது!
அவன் உள்ளம்
வெள்ளை மேகமானது!
அவன் மறைவு
காரிருள் உலகமானது!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
