அவளின் கண்
இன்றென்ன கவிதை
எழுத வில்லையா
எனக் கேட்கிறாய்
திருடித் திருடி
எவ்வளவு கவிதைகள்
நானும் எழுதுவது
நான் திருடுகிறேன்
என்று தெரிந்தும்
நீயும் அதை
ரசிக்கிறாயே
என்னவென்று சொல்ல
திருடத் திருட
இன்னும் கூடிக்
கொண்டே போகிறதே
உன் அழகு மட்டும்
உன்னை திருட
தான் இலக்கு வைத்தேன்
உன் கண்விழிகளை பார்த்ததும்
அதை என் கவிதையாக எழுதி
வைத்தேன். _✨_