சங்கங் குப்பி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கரப்பான் கிரந்தி கருங்குட்ட ரோகம்
உரப்பான மேகம் ஒழியுங் - கருவாம்
கருங்கிரந்தி செவ்வாப்புக் கட்டிகளும் ஏகும்
அருஞ்சங்கங் குப்பிக்(கு) அறி
- பதார்த்த குண சிந்தாமணி
நேரிசை வெண்பா
வெட்டை சொறிசிரங்கு வீறிவ ருஞ்சூலை
துட்டவா தங்கபந்து ணுக்கிருமல் - கெட்டவிஷம்
அங்கங்கொள் பூச்சியிவை யாவும்போம் பித்தமுறுஞ்
சங்கங்குப் பிக்கெனவே சாற்று
- பதார்த்த குண சிந்தாமணி
இச்செடி கரப்பான், கிரந்தி, கருங்குட்டம், மேகம், வாத நோய், கர்ப்பத்திலுண்டாகும் கருங்கிரந்தி, செவ்வாப்புக்கட்டிகள், வெட்டை, சொறி சிரங்கு, சூலை, வாதம், கபம், இருமல், கெட்டவிடம், பூச்சி இவை அனைத்தும் நீங்கும்; பித்தம் உண்டாகும்