எதற்கு இந்த பேயாட்டம்

குண்டு மழை பொழிந்தபின்
கார்மேகம் சூழ்வது
இயற்கைக்கு புறம்பானதென
அறிந்திருந்தும்
இயற்கைக்கு இழைத்த
அநீதியல்லவா !

இறந்து கிடக்கும் மக்களைக்
கடந்து செல்பவர்களின்
விழிகளில் வடியும் கண்ணீரோடு
வாய் விட்டு ஓலமிட்டு
அழுத காட்சி
ஆழ் மனத்தையே அதிர வைத்ததே !

கார்கில் போரில் சிதைந்து
காட்சி தரும் கட்டிடங்கள்
கருத்த நிறத்தோடு நொறுங்கி
கொரோனா நோயாளி போல
எலும்பும், தோலுமாய் இனி
எத்தனை நாட்கள் நின்றிருக்கும் ?

ஏதிர்படும் விலங்கை
அடித்து கொன்று தின்று
உயிர் வாழும் புலி
எதற்கும் கவலைப்படாத
மிருகம்—அதுபோல
மனிதர்களும் இருக்கலாமோ !

மக்களை வேட்டையாடிக்
கொன்று குவித்து
பிழை செய்து உயிர் வாழும்
புலி யென்றால்
தன்னலமா ?—இல்லை
நாட்டு நலமா?

நாட்டுக்கு நல்லதென
நாட்டு மக்களையே
பலி கொடுத்தால்
பாவமா ? பரிதாபமா ?
மக்களையே வேண்டாமென்றால்
மண்ணில் எதற்கு இந்த பேயாட்டம் ?

எழுதியவர் : கோ. கணபதி. (24-Mar-22, 5:34 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 49

மேலே