கேட்கிறேன் மனம் விட்டு
உடற்பயிற்சி, வேலைகள் செய்து விட்டு
இரவு உணவை பசித்து புசித்து விட்டு
பின்னர் அரை மணி நேரம் நடந்து விட்டு
மனதுக்கு பிடித்த ஏதாவது செய்து விட்டு
எண்ணத்தில் எதிர்மறை களைந்து விட்டு
களைப்புடன் படுக்கையில் படுத்து விட்டு
ஐந்து பத்து நிமிடங்களில் குறட்டைவிட்டு
இன்பமுடன் தூங்குவதை இழந்து விட்டு
நள்ளிரவு 12 மணி ஒலியை கேட்டு விட்டு
தரமான தூக்கம் என்பதை இழந்து விட்டு
அதனால் உண்மை மகிழ்ச்சி தவற விட்டு
இது வாழ்க்கையா என்ன? மனம் விட்டு
கேட்கிறேன் ஒளிவுமறைவு விட்டு விட்டு!