பேசா மடந்தை
என் காதலி
பேசா மடந்தையாக
இருந்தவள் தான்...!!
காதல் செய்யும் போது
அவள் பேச மாட்டாளா ..
என்று ஏக்கம் கொண்ட
நாட்கள் ஏராளம் ..!!
ஆனால்..
திருமணத்திற்கு பிறகு
பேச ஆரம்பித்தாள்
மடை திறந்த
வெள்ளம்போல்
அணைப்போட்டு தடுத்தாலும்
நிறுத்துவதற்கு இயவில்லை..!!
நான் தோல்வியில்
துவண்டு போய்
சாதுவாக மாறிவிட்டேன்
கமண்டலமும் தண்டம்
மட்டும்தான் கையில் இல்லை ..!!
--கோவை சுபா