பிரியமான தோழிக்கு

பிரியமான தோழிக்கு;

உன் அன்பை அழகாக என்னுள்
விதைக்கும் சின்னச் சின்ன பிரிவுகள் வேண்டும்...

உன்னோடு தொலைந்து போகும்
இதமான பொழுதுகள் வேண்டும்

கண்களில் மெல்லிய கண்ணீர் வேண்டும்
(அதன் ) காரணம் நீ... யாக வேண்டும்

என் எண்ணங்கள் கவிதைகளில் பிரவேக்க வேண்டும்
அதில் கருவாய் எப்போதும் நீயே .. வேண்டும்

எப்போதும் முடியாத தேடல் வேண்டும் -உன்னில்
எந்நாளும் தீராத அன்பு வேண்டும் - என்னில்

உன்னோடு கைபிடித்து நடை பயில வேண்டும்
கனவாகக் கண்டதெல்லாம்
கண் முன்னே வேண்டும்

வயதாகும் போதும் வாஞ்சையாய்
உன் வார்த்தைகள் வேண்டும் .

காலங்கள் கடந்த பின்னும்
கைபேசி சிணுங்கல்களில்
என்றென்றும் நீ.. வேண்டும்

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (25-Mar-22, 6:59 pm)
பார்வை : 431

மேலே