பிரியமானவளே

பிரியமானவளே;

என் கை ரேகைகள் சொல்கிறது
நான் .. நீ கைகோர்த்து நடந்த கதைகளை...

என் அலைபேசி
அலுக்காமல் படிக்கிறது
நீ அனுப்பிய
ஆழமான தகவல்களை ..

என் ஓய்வு நேரங்கள்
சத்தமில்லாமல்
பயணம் செய்கின்றன
உன்னை நோக்கி..

என் நாளின் தொடக்கமும்,
முடிவும்
நீ
இல்லாமல்
நிகழ்வது இல்லை..

உண்மையைச் சொன்னால்
நான் உன்னோடு தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,
நீ தூரமாக இருந்தும்..

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (25-Mar-22, 6:37 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : priyamanavale
பார்வை : 262

மேலே