சபாபதி
24.03.2022
தங்கத்தை வெப்பத்தில்
அடித்து வளைத்து நேர்த்தி
செய்யத் தெரிந்த சபாபதி
கற்ற பொறியியல் கல்விக்கு
அர்த்தங்கள் அதிகம்...
இவனது ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவும்...
வீட்டில் நகை செய்யும்
தொழில் பயிற்சியுடன்
பொறியியல் கற்ற சபாபதி
ஆற்றும் பேராசிரியர் தொழில்
மிக அபாரமானது.. சபாவிடம்
கற்பது மிக அதிர்ஷ்டமானது..
சபா கற்றுத் தரும்
ஐஸோமெட்ரிக் வியூ(கம்)
வெனிலா ஐஸ்கிரீம்...
பெர்ஸ்பெக்டிவ் வியூ(கம்)
பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம்...
தங்கத்தில் வேலை செய்யத்
தெரிந்த சபாவிற்கு வேலையைத்
தங்கமாய்ச் செய்யத் தெரியும்..
சபாவை சபைகள் பாராட்டும்...
இவன் கற்றுத் தந்த பாடங்கள்
நிலநடுக்கோடு முதல்
துருவங்கள் நோக்கிய திசையில்
பூகோளம் பார்த்திருக்கும்...
உலகப் பொருளாதாரம்
இவனாலும் உயர்ந்திருக்கும்...
சபாபதி உன்னை வாழ்த்தி
மகிழ்கிறேன்... இனிய
பிறந்தநாள் வாழ்த்துகளோடு...
வானமும் வசப்பட வாழ்க என்றும்
இனிய வசந்தங்களோடு...
அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
👏👍💐😀🌹🙏