உப்பு இல்லை சப்பு உண்டு

அரிசி சாதம் ஒரே ஒரு கப்பு
உப்பிட்டு உண்டால் தப்பு
சப்பென உண்டால் மப்பு
இனிப்பு உண்டால் தவறு
என் செய்யும் என் வயிறு
எண்ணெய் சேர்த்தால் மிகவும் பாபம்
இவை யாவும் கொழுப்பு போடுகிற தூபம்
பில்டர் காப்பி இரு தடவை மட்டுமே
பச்சை தேநீர் மட்டும் எப்போதும் கிடைக்குமே
இப்படி ரேஷன் கார்டாக ஏன் வாழணும்?
எனக்கு இப்படி இருக்கிறது என நீங்க ஏன் அழணும்?

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (29-Mar-22, 7:11 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே