இலங்கை என்ற நாடு இப்போ படும் பாடு
ஒவ்வொரு குடிமகனும்
நம் நாடு ! செழிப்போடு
வளமோடு இருக்கனும் என்று ஆசைப்பட்டது தவிடு பொடியாகி...
நாடே வேணாம்டா சாமி !
நம் நாட்டை விட்டுட்டு போடா ஆசாமி !
என்ற கோஷங்களுடனும் நிராசையுடனும் நடைபாதையில் ரெடியாகி ..
எல்லா குடிமக்களும் பிற நாடுகளை
கடக்கும் முனைப்புடன்
வாழ்க்கைச்செலவை தாங்க முடியாமல்
தடுமாறிய நிலைமையில் அல்லோல கல்லோலத்துடன்
நாட்டு அதிபரையே முற்றுகையிட்டு
கதிகலங்க வைத்த சம்பவம் நடந்தேறியவுடன்
பொறுத்தது போதும் பொங்கி எழுடா என்ற வீரா வேகத்துடன்
இலங்கை என்ற நாடு ! இப்போ படும் பாடு ! ஐயோ