கடலென காதல்

கடலென நீ
அலையென நான்
உன் இதயத்துடிப்பாய்,
கரையில் ஓயாமல் நான்.
உன் அலையில்
பகட காயென புரண்டு,
உன்னால் தூக்கி வீசப்பட்டு,
உன்னுள் இழுக்கப்பட்டு,
நீ விளையாட்டாய் விளையாடும்
உன் விளையாட்டில் நான் பலி."

எழுதியவர் : தணல் (1-Apr-22, 2:49 pm)
சேர்த்தது : தணல் தமிழ்
Tanglish : kadalena kaadhal
பார்வை : 166

மேலே