உன் நினைவுகளே எனக்கு பாரமாக 555

***உன் நினைவுகளே எனக்கு பாரமாக 555 ***
உயிரே...
உன் கண்ணீரால் என் சோகத்திற்கு
ஆறுதல் சொன்னவள் நீ...
இன்று என் கண்ணீருக்கு
சொந்தமாகி போனது ஏனோ...
உன்னை நினைக்கும்
போதெல்லாம் விழுந்து விடுகிறது...
இரண்டு சொட்டு
கண்ணீர் மண்ணில்...
சுயநினைவின்றி
இருக்கும் என்னை...
நெஞ்சில் பாரம் அதிகமானதால்
மனஅழுத்தம் என்கிறார் மருத்துவர்...
அவருக்கு தெரியுமா மனஅழுத்தத்தின்
காரணம் நீ என்று...
தண்ணீரில் தத்தளிக்கும்
பாய்மர கப்பலுக்கு...
கலங்கரை
விளக்காய் இருந்தவள் நீ...
என் வாழ்வில் இன்று தூரத்து
வெளிச்சமாக கூட நீ இல்லை...
மரனிக்கவும்
நேரமில்லை எனக்கு...
உன் சுவாச தென்றல்
என் சுவாசமாக இருப்பதால்...
பால்வடியும் கள்ளிச்செடி
நீ கொடுத்தால் நிரந்தர சந்தோசம்...
உன் நினைவுகள்
எனக்கு பாரமாக...
நானோ
மண்ணிற்கு பாரமாக...
இனியும்
எதற்கு இந்த ஜீவன்.....
***முதல்பூ .பெ .மணி .....***