சிவந்திருக்கும் உறங்காத என் விழிகள் 555

*** சிவந்திருக்கும் உறங்காத என் விழிகள் 555 ***



முல்லை மலரே...


எனக்கு தெரியாமல் என்
உணர்வுக்குள் புகுந்தவள் நீதான்...

நீ என்னருகில் வரும்
நாளுக்காக ஏங்குகிறேன்...

உன் தோளில்
தலைசாய்த்துக்கொள்ள...

என் இதய துடிப்பில் இருக்கும்
உன் நினைவுகளை...

தினம் பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறேன்...

நீ திரும்பி வந்தால்
உனக்கு பரிசளிக்க...

கடந்த நாட்களை நினைவூட்டுகிறது
சில கண்ணீர் துளிகள்...

தொலைத்த
பொருள் கிடைத்துவிடும்...

கலைந்த கனவுகள்
கிடைப்பதில்லை மீண்டும்...

என் அருகாமை
உனக்கு அருவருப்போ...

அப்போது தெரியவில்லை நீ
முகம் சுழிக்கும் போதெல்லாம்...

உன் இதழ்கள்
உச்சரிப்பில் உணர்ந்தேன்...

உறங்காத என் விழிகள்
சிவந்து கிடக்கிறது...

சில அழகிய
நினைவுகளால்...

ஈர நிலத்தில்
நெளிந்து செல்லும் மண்புழு...

காய்ந்த நிலத்தில்
துடிதுடிப்பதை கண்டதுண்டா...

கண்டிருந்தால் என் இதய
துடிதுடிப்பை நீ உணர்வாய்...

முழுமதி கொண்ட
வான்நிலா கரைவது போல்...

என் இதயமும்
தினம் கரைகிறது உணர்வாயா.....


***முதல்பூ .பெ .மணி .....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (1-Apr-22, 5:41 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 266

மேலே