நரிமூஞ்சிக்காரன்

அதிகாலையில்
நரி முகத்தில் விழித்தால்
அதிர்ஷ்டம் என்பார்கள்.
வீட்டில் நரி வளர்க்க
வனத்துறை அனுமதி கிட்டாதே!
நான் என்ன செய்ய?

நரிமூஞ்சிக்காரன் ஒருவனை என்
குழுமத்தின் தலைமை செயலதிகாரியாக
நியமித்து என் மாளிகை அருகே உள்ள
மற்றோரு சிறிய மாளிகையில்
தங்கிப் பணியாற்ற உத்தரவிட்டேன்.

நரிமூஞ்சி அதிகாரியின்
முதல் பணி அதிகாலை நேரம்
என் முன்னே வந்து நிற்கவேண்டும்
அவன் முகத்தைப் பார்த்த வண்ணம்
கண் விழிக்க வேண்டும் நான்.

அடுத்த நாள் முதல் அதிர்ஷ்டம்
கொட்டோ கொட்டுமென்ற
கனவோடு இருந்தேன்.
நடந்ததைச் சொல்ல வெட்கப்படும்
நிலைக்குத் தள்ளப்ப்படுவேன்.

நரிமூஞ்சிக்காரன் என் போட்டியாளர்களின்
கைப்பிள்ளை என்பது பின்னரே தெரிந்தது
என் குழுமத்தின் பங்குச் சந்தை
முதலீடெல்லாம் சரியத் தொடங்கியது.
என் நரிமூஞ்சி நம்பிக்கையும் நொறுங்கிப் போனது.

அடுத்த நாளே ஒருநாள் சம்பளத்தைக் கொடுத்து
நரிமூஞ்சி செயல் அதிகாரியை
விரட்டி அடித்தேன்
அவன்போன பின்தான் தெரிந்தது
என் முதல் எதிரி முத்துராஜன்
அனுப்பி வைத்த நபராம் அந்த நரிமூஞ்சி?

ஐயகோ ஏமாந்து போனேனே
என் மூடநம்பிக்கையை ஒழித்துக் கட்டிய
நரிமூஞ்சிக்காரனுக்கு நன்றி சொல்லவேண்டும்.
போலி சான்றிதழகளைக் காட்டி
தலைமை செயல் அதிகாரியாகப்
பணியில் சேர்ந்தாலும் என்
கண்களைத் திறந்த நரிமூஞ்சிக்காரனுக்கு
மீண்டும் மீண்டும் நன்றி சொல்வேன்.

எழுதியவர் : மலர் (3-Apr-22, 5:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 291

மேலே