புதுப் பழமொழிகள்

1. பட்டம் விடுபவன் ஒரு நாள் பட்டம் பெறலாம்
ஆனால் மட்டம் போடுபவன் சட்டம் போட முடியுமா?

2. குறட்டை விடுபவன் வாழ்க்கையை கோட்டை விடலாம்
பரட்டை தலையுடன் இருப்பவன் வழுக்கை விழ விடலாமா?

3. மூச்சு விடுபவன் பேச்சு இல்லாமல் இருக்கலாம்
பேச்சை விடுபவன் மூச்சை விடாமல் இருப்பானா?

4. தோணி விடுபவன் கூட நீச்சல் தெரியாமல் இருக்கலாம்
முகம் கோணி போகின்றவன் முகமலர்ச்சியுடன் இருப்பானா?

5. புகை விடுபவன் பகை கொள்ளாமல் இருக்கலாம்
பகை கொள்கிறவன் விஷமப் புகை விடாமல் இருப்பானா?

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (6-Apr-22, 4:56 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 163

சிறந்த நகைச்சுவைகள்

மேலே