தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
வசந்தங்களோடு வந்த
சுபகிருது வருடத்தில்
சுபமே என்றும் நிலவ
இனிய தமிழ் புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்!
பூக்களின் வாசத்தில்
சந்தனத்தின் சங்கமம்
சாகசம் செய்திடும்..
பலாவோடு தேனும் சேர
இன்னும் இனித்திடும்...
மலர்களின் தோட்டத்தில்
மயில்களின் நடனம்
கண்களுக்கு விருந்தாகிடும்...
அழகிய நந்தவனம்.. அதில்
குளிர் தென்றல் வீசிட
மனம் குதூகலித்திடும்..
இனிய இசையில்
மோகனம் மயக்கிடும்...
இவையெல்லாம் ஒன்று சேர
பெற்றிடும் இன்பங்கள் யாவும்
தமிழோடு சேரும்
சுபகிருது வருடத்தில் நிலவட்டும்...
அழகு தமிழே! அற்புத மொழியே!!
எமது பெருமிதம் நீயே!!!
என்றும் வாழும் அன்னையே...
வணங்குகிறோம் உன்னையே...
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
👍😀🌹🌺🌷
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
