உன்ன மறக்க சொல்லிவிடாதே 555

***உன்ன மறக்க சொல்லிவிடாதே 555 ***
ப்ரியமானவளே...
என் மனதோ
மலர்கள் அல்ல...
காலையில் மலர்ந்து
மாலையில் வாடிவிடுவதற்கு...
பென்சில் கொண்டு எழுதி
அழிப்பானால் அழிப்பதற்கு...
காதல் காகிதமல்ல
உடலில் குத்திய பச்சை போன்றது...
மரித்தாலும் உடலில்
இருக்கும் நிலையாக...
மறந்துவிடு என்று
நீ சொல்வதைவிட...
முகம் பார்த்து இறந்துவிடு
என்று சொல்லிவிடு...
நான் ஜென்மங்கள்
ஏழு எடுத்தாலும்...
நீ வாழும் நெஞ்சில்
இன்னொரு ஜீவன் எப்படி...
ஆடையில் விழுந்த
வாழைச்சாறு கூட...
ஆடையை விட்டு
போவதில்லை...
என் மனதில் இருக்கும்
உன்னை மட்டும்...
எப்படி எளிதாக
வெளியில் எறிவேன்...
தடைகளை நீ போட்டால்
விலகி மட்டும் நிற்பேன்...
தவறியும்
உன்னை மறந்தல்ல...
வேறொருவர்
தடைகள் போட்டால்...
உடைத்தெறிந்து
உன் கரம் பிடிப்பேன்...
நீ
மறந்துசெல் என்னை...
உன்னை மறக்க
சொல்லாதே நீ.....
***முதல்பூ .பெ .மணி.....***